டிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா?

டிசம்பர் 6ம் நாள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வா? நிச்சயமாக அச்சம்பவம் ஆவேசமான உணர்ச்சியால் உந்தப்பட்ட மக்கள் கூட்டத்தால் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பதற்கும், உயர்மட்ட சதித்திட்டத்தின் விளைவாக நிகழ்ந்ததுதான் என்பதையும் நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. நாடு முழுவதும் வகுப்புவாத பரவசத்தை உருவாக்க இச்சம்பவத்தை சங்பரிவார்கள் பயன்படுத்தினர். அனைத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு போஷித்து வளர்த்தியெடுக்கப்பட்ட இந்த வகுப்புவாத பரவச நிலையின் இறுதிக் கட்டம் மஸ்ஜிதின் இடிப்பில் முடிந்தது.

ஆனால், முக்கியமான கேள்வி என்னவெனில் இந்த அநீதமான செயலுக்கு டிசம்பர் 6 என்ற குறிப்பிட்ட தேதியை தேர்ந்தெடுக்க இந்துத்துவ சக்திகளை தூண்டிய காரணி என்ன? இக்கேள்விக்கான பதிலை நுணுக்கமாக ஆராய்ந்தால் இந்துத்துவ வகுப்புவாதத்தின் உண்மையான தன்மையை வெளிக்கொணர முடியும்.

அனைத்து மனித சமூகங்களிலும் சுரண்டல் காரர்களுக்கும், சுரண்டப்படும் பிரிவுகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. வரலாற்றின் சில முக்கியமான தருணங்களில் இது வன்முறை வடிவமாக மாறியபோதிலும் பெரும்பாலும் மனரீதியான தளத்தில்தான் தணியாத இப்போராட்டம் நடக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆளும் வர்க்கத்தின் தந்திரம் கடந்த காலம் குறித்த நினைவுகளை அழிப்பதாகும்.

தாங்கள் சந்திக்கும் அடக்குமுறைகளைவிட முன்னோர்கள் சந்தித்த கொடூரங்களை குறித்து நினைவு கூர்வதுதான் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் போராட்டக்காரர்களாக மாற்றும். அதனால்தான் உயர்சாதியினர் இந்த கூட்டு நினைவுகளை எல்லா துறைகளிலும் இருந்து துடைத்தெறிய முயற்சிக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் அதில் வெற்றி பெறவும் செய்கின்றனர்.

ஆளும் வர்க்கம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அழிக்க முடியாத சில நினைவுகள் உண்டு. அத்தகைய சூழல்களில் இந்த நினைவில் கலப்படம் செய்யவும் தங்களது நலன்களை நோக்கி திசை திருப்பவும் முயற்சிக்கின்றனர்.

1992 டிசம்பர் 6ம் தேதி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது அத்தகையதொரு முயற்சி நடந்தது.

இந்து நம்பிக்கையின் முக்கிய அம்சம் சாதிக் கட்டமைப்பாகும். அதைவிட மேலாக இந்துத்துவம் என்ற கொள்கைதான் இந்த கட்டமைப்பை வளப்படுத்துவதும், நிலைநாட்டுவதுமாகும்.

உயர்சாதியினர் ஆதிக்கமும், அவர்களின் சமூகஅரசியல்பொருளாதாரகலாச்சார மேலாண்மையை எவ்வாறு அடையலாம் என்பதுதான் சனாதன தர்மத்தின் முக்கிய கவனமாகும்.

இந்த அநீதமான சுரண்டல் முறைதான் (சாதிக் கட்டமைப்பு) இந்நாட்டின் அறிவு மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும், உற்பத்தி சக்திகளின் வரலாற்று தேக்கத்திற்கும் தடையாக அமைந்தது.

தலித் மக்களின் மேன்மைக்காக சுதந்திரத்திற்கு முந்தை காலகட்டத்திலும் பல்வேறு மக்கள் போராடினர். சுதந்திரத்திற்கு பிந்தைய சம்பவங்களும் இந்த போராட்டத்தின் வீரியத்தை காட்டுகிறது. டாக்டர் ராம் மனோகர் லோகியா, கர்பூரி தாக்கூர், கன்சிராம், அண்ணாதுரை, பி.பி.மண்டல், வி.பி. சிங் ஆகியோர் அதில் முக்கிய கதாபாத்திரங்கள்.

வி.பி. சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை அறிவித்தது சõதி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஊக்கம் அளித்தது. வி.பி. சிங் ஏற்படுத்திய இந்த எழுச்சி உயர்சாதிக்கு எதிரõக தலித்பகுஜனங்கள் எழுப்பிய சவாலை எதிர்க்க அவர்கள் கமண்டலத்துடன் வந்தனர். தொடர்ந்து அத்வானி நடத்திய ராம ரத யாத்திரை கடந்து சென்ற வழிகளில் எல்லாம் ரத்தம் ஓட்டப்பட்டது. இறுதியாக லாலு பிரசாத் யாதவ், அத்வானியை கைது செய்ததைத் தொடர்ந்து பா.ஜ.க., வி.பி. சிங் அரசுக்கான ஆதரவை விலக்கி அவர்களால் மன்னிக்க முடியாத குற்றத்திற்கு தண்டனை அளித்தனர்.

இந்துத்துவா சக்திகள் நடத்திய வகுப்புவாத பிளவு வலுவடைந்து அது பாபரி மஸ்ஜித் இடிப்பில் முடியவும் செய்தது. மஸ்ஜிதை இடித்ததன் பின்னணியில் பல காரணங்களை காண முடியும். முதலாவதாக, இதன் மூலம் மண்டல் கமிஷன் செல்வாக்கை குறைப்பதுதான் நோக்கம்.

இந்து உள்ளங்களில் ஏற்பட்ட தோல்வி உணர்வை, பெருமையான உணர்வாக மாற்றுவது என்பது இரண்டாவதாகும். மூன்றாவதாக தலித்பகுஜனங்களின் திட உறுதி மூலம் எழுந்த சாதி எதிர்ப்பு போராட்டங்களையும், சமூக ரீதியான முரண்பாடுகளையும் விசால இந்து ஐக்கியத்தின் மூலம் தணித்தலாகும். இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்திற்காக வகுப்புவாதத்தை கிளறிவிட்டு இந்து வாக்கு வங்கியை பா.ஜ.க.விற்கு அனுகூலமாக திரிப்பதே மற்றொரு லட்சியம்.

ஆனால், குறிப்பிட்ட தேதி (டிசம்பர் 6) தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை ஆராயும்போது இன்னொரு காரணத்தை நாம் கண்டறிய இயலும். இருபதாம் நூற்றாண்டில் இந்துத்துவாவினர் சந்தித்த முக்கிய சவால், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவார். இந்த சவால் அரசியல் என்பதைவிட கொள்கை ரீதியிலானதாகும். அம்பேத்கரோடு இந்துத்துவத்தை ஆக்கப்பூர்வமாக சந்தித்த இதர இரண்டு நபர்கள் பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும், டாக்டர் ராம் மனோகர் லோகியாவும் ஆவர். பெரியாரின் செல்வாக்கு தென்னிந்தியாவில் மட்டும் ஒதுங்கியது துரதிர்ஷ்டவசமானது.

டாக்டர் லோகியாவின் பிச்டா பாவே

சவ்மைன் ஷாட் (பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு நூறில் 60 கிடைக்கச் செய்யுங்கள்) என்ற முழக்கம் இந்துத்துவா சக்திகளின் அரசியல் பலத்திற்கு திறனான சவாலை எழுப்பியது. வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசம், பீகாரில் இன்று நாம் காணும் விழிப்புணர்வும், சமூக மாற்றமும் லோகியா கொள்கையின் சாதனை அல்லாது வேறு ஏதும் இல்லை. எனினும், இந்து மதம், தத்துவ

சாஸ்திரம், பாரம்பரியம் ஆகியன குறித்த லோகியாவின் சிந்தனைகளில் உள்ள முரண்பாடுகளும், ஸ்திரத்தன்மையற்ற நிலையும் விமர்சனத்திற்கு வழி கோலுகிறது.

அவருக்கு வலுவான முழக்கம் இருந்தாலும், சிந்தனைகளில் ஏற்பட்ட இந்த இடைவெளி சமூக நீதியின் அர்த்தப்பூர்வமான லட்சியத்தை நோக்கிய எழுச்சிக்கு போதுமான தடையை ஏற்படுத்தியது. சமூக நீதியின் அரசியலுக்கு சக்தி கிடைக்க வேண்டுமெனில் லோகியா  அம்பேத்கர் கொள்கைகளில் சுமூகமான ஒரு ஐக்கியம் தேவை.

இந்து மத நூல்களை நுணுக்கமாக ஆராய்ந்து வலுவான ஆய்வுகளை எழுதி மனுஸ்மிர்தி கொளுத்துதல் போன்ற அடையாள போராட்டங்கள் நடத்தி, வட்ட மேஜை மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எழுப்பி இந்து மதத்திலும், சமூகத்திலும் முரண்பாடுகளையும், போலித்தனங்களையும், மனித நேயத்திற்கு எதிரானவைகளையும் அம்பேத்கர் உலகின் முன்னால் தோலுரித்தார். தலித்களுக்கு இந்திய அரசியலில் சுதந்திரமான அடையாளம் கிடைப்பதற்கு காந்தி போன்ற ஆளுமைகளிடம் வெளிப்படையாக மோதுவதற்கு கூட அம்பேத்கர் தயங்கவில்லை.

அம்பேத்கரை சூத்திரர்கள், பஞ்சமர்களுக்கு மட்டுமான தலைவராக புரிந்து கொண்டால், அது ஒரு குறுகிய நிலைப்பாடாகும். அவர் அனைத்து இந்துக்களின் தலைவராக இருந்தார். காரணம், சாதி சுவர்களை  உடைத்து முழு இந்து சமூகத்தையும் விடுதலையடையச் செய்யவே அவர் பாடுபட்டார். ஒரு பிராமணனுக்கும், தோட்டிக்கும் இந்த மனிதநேயத்திற்கு எதிரான சாதிக் கட்டமைப்பில் இருந்து விடுதலை பெறுவதற்கான பாதை அவருடைய சித்தாந்த உட்பார்வையில் நன்கு ஆழமாக பதிந்திருந்தது.

1992 டிசம்பர் 6ம் தேதி இந்தியாவில் தலித் பகுஜன மக்கள் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை கடைப்பிடித்தபோது சமத்துவம், சகோதரம், சுதந்திரம் அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பிராமணீய கட்டமைப்பிற்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தை நினைவுக்கூர்ந்து, அம்பேத்கர் நடத்திய இப்போராட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்வதற்கான உறுதிமொழியை புதுப்பிக்கும் அதே வேளையில் அதற்கு மிகவும் ஒத்த வகையில் சங்பரிவாரம் ஆயிரக்கணக்கான கரசேவகர்களுடன் பாபரி மஸ்ஜிதை தகர்த்தது.

பாபரி மஸ்ஜிதை இடித்ததன் மூலம் அம்பேத்கரின் நினைவுகளை களங்கப்படுத்துவதற்கான முயற்சிகளை நடத்தினர்.

இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி தலித்பகுஜன மக்கள் அம்பேத்கரின் வாழ்க்கையையும், போராட்டத்தையும் நினைவுகூர்வதற்காக ஒன்று கூடும்போது அதற்கு சமமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் நினைவு தினமும் நடைபெறும். பாபரி மஸ்ஜித் இடிப்பு தலித்பகுஜன மக்களுக்கு எதிரான உளவியல் போராகும். இது தலித்கள், முஸ்லிம்களுக்கு எதிரõன வழக்கமாக நடைபெறும் இனப்படுகொலைகளை விட அபாயத்திலும், வன்முறையிலும் சற்றும் குறைந்தது அல்ல.

அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 12) ஏன் பாபரி மஸ்ஜிதை இடிக்க தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்வி எழலாம். பதில் எளிதானது. அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒப்பிடுகையில் அவரது பிறந்த தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடனும், விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை தேர்ந்தெடுத்தால் இந்துத்துவா சக்திகளின் அம்பேத்கருக்கு எதிரான கொள்கை உடனடியாக வெளிச்சத்துக்கு வரும் அபாயம் உண்டு. அவ்வேளையில் அத்தகையதொரு அபாயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் இயலாது.

மேலே நாம் கூறியதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இருந்தாலும் இந்துத்துவவாதிகளின் கொள்கையையும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது இதனை அப்படியே ஒதுக்கிவிடவும் முடியாது. இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து தேசத்தை பாதுகாக்க முஸ்லிம்களும் தலித்களும் கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் அவசியம்.