தப்ரேஸ் அன்சாரி வழக்கு: குற்றவாளிகள் மீதான கொலை வழக்கு பிரிவுகள் நீக்கம்  

0

வன்முறை கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை என ஜார்க்கண்ட் போலீசார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 17-ந் தேதி தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை இந்துத்துவ அமைப்பை சேர்ந்த கும்பல் கட்டி வைத்து தாக்கியது. மேலும் ஜெய் ஶ்ரீராம், ஜெய் ஹனுமான் என்ற முழக்கங்களை சொல்லுமாறு கூறி கொடூரமான தாக்குதலை நடத்தினர் இந்துத்துவவாதிகள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுமார் 18 மணிநேரம் நீடித்த இத்தாக்குதலில் இருந்து மீட்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். தப்ரேஸ் அன்சாரி மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மூன்று மாதத்திற்கு பிறகு ஜார்கண்ட் போலீசார் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை சமர்ப்பித்தனர். அதில் தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறுப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன.

Comments are closed.