தீபாவளி பட்டாசு வெடுப்பு தகராறினால் முசப்பார் நகரில் 18 பேர் காயம்

முசப்பார் நகரின் பேன்சி கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறு பெரும் மோதலாக மாறியது.

இந்த மோதலில் கற்கள் மற்றும் துப்பாக்களை கொண்டு தாக்குதல் நடத்தியதால் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கட்டோலி  பகுதி காவல் துறையினரம் காவல் துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.