நடன குழுவின் பாங்காக் பயணத்திற்காக கொடுக்கப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதி

 மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிர பஞ்சம் நிலவி வரும் இந்த சமயத்தில் ஒரு நடன குழவின் பாங்காக் பயணத்திற்காக 8 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணில் கால்கலி என்பவரது தகவல் அறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவலில் இருந்து இது தெரிய வந்துள்ளது. கஷ்டகாலங்களில் மக்களுக்கு உதவுவதற்கு ஒதுக்கப்படும் நிதியை இவ்வாறு பயன்படுத்தியது ஏற்க்கதக்கதல்ல என்று எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால் இதில் தவறேதும் இல்லை எனவும், கலாச்சார மேம்பாட்டுக்காகவே இந்த நிதி கொடுக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளது மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம். மேலும் அணில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று பா.ஜ.க தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.