நூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்

நூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்

அல்குர்ஆன் அருள் நிறைந்த பூமியாக ஒருங்கிணைந்த ஷாம் தேசத்தை விவரிக்கின்றது. முந்தைய ஷாம் தேசம் என்பது தற்போதைய சிரியா, லெபனான், ஃபலஸ்தீன், ஜோர்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.

நபிகளாரின் காலத்திற்குப்பின் நேர்வழிபெற்ற கலீஃபாக்கள் அபூபக்கர் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் ஆட்சியில் ஷாம் தேசத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுதான் இப்புத்தகத்தின் கரு.

முஸ்லிம்களின் முதல் கிப்லா பைத்துல் முகத்தஸ். இறைத்தூதர்கள் பலரின் அடக்கதலங்கள் நிறைந்த இப்புனித பூமி அப்போது ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்புனித பூமி முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படும் என்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பின்படி கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் முதல் படையை ஷாம் நோக்கி அனுப்பி வைக்கின்றார்கள்.

வீரம் மிகுந்த யமன் தேசத்து மக்கள், தீரமுள்ள மதீனாவாசிகள் என முஸ்லிம்களின் முதல் படை ஷாம் தேசம் நோக்கி நகருகின்றது. தபூக்கிலிருந்து தொடங்கிய யுத்தம் சீசரியா வரை ஷாம் தேசத்தின் அனைத்து பிரதேசங்களிலும் நடைபெற்றது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்