பதக்கங்களை திருப்பி கொடுக்கும் முன்னாள் இராணுவத்தினர்

நாட்டின் பல்வேறு மக்கள் மத்தியிலும் பெருவாரியாக மோடி அரசு மீதான எதிர்ப்பு பரவி வருகிறது. தேர்தலுக்கு முன் கற்பனை செய்தது போல மோடி அரசு இல்லை என்பது அந்த 31 % பேர்களுக்கும் புரிய தொடங்கிவிட்டது. நாட்டில் பரவி வரும் சகிப்புத்தன்மையற்ற சூழலினாலும் மத வெறி கொள்கைகளினாலும் பலர் பாதிக்கப்படுவதை எதிர்த்து அடிமட்ட மக்களில் தொடங்கி அறிவு ஜீவிகள் வரை எதிர்ப்பு வலுத்திருக்கிறது. பலர் தங்கள் விருதுகளை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் தற்பொழுது முன்னால் இராணுவத்தினரும் இணைந்துள்ளனர்.
இது குறித்து ஒரு பதவி ஒரு பென்ஸன் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் குழுவின் தலைவர் வி.கே.காந்தி கூறுகையில் “அரசு எங்களுக்கு முழுதும் முரண்பாடுகள் நிறைந்த மற்றும் ஒரு பதவி ஒரு பென்ஸன் (OROP) என்பதன் விளக்கத்துக்கே மாறுபட்ட ஒரு திட்டத்தை அமுல் படுத்த நினைக்கிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதிலும் உள்ள முன்னாள் இராணுவத்தினர் தங்களது பதக்கங்களை நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மிகவும் கண்ணியமான முறையில் திருப்பி தர இருக்கின்றோம். ஒவ்வொரு மாவட்ட நீதிபதிகள் இதனை பெற்றுக்கொள்வார்கள். அப்படி அதனை வாங்க அவர்கள் வரவில்லை என்றால் அதனை அங்கேயே விட்டுச்செல்வோம். எங்களது பதக்கங்களை பிரதமரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ ஒப்படைக்க வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.