பீமாகோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு.!

பீமாகோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சோமா சென், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, வெர்னான் கோன்சால்வஸ் ஆகியோரின் பிணை மனுவை நிராகரித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில், அதே நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டித்ததுள்ளது. செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 27 வரை இரண்டு வாரங்கள் இணை வழங்கப்பட்ட அவருக்கு மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வில்சன் செப்டம்பர் 30 அன்று தலோஜா மத்திய சிறைக்கு திரும்புவார்.
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை குறிப்பிட்டு இவர்கள் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.