புதிய அரசியல் கட்சி துவங்கினார் இரோம் ஷர்மிளா

2

மனித உரிமை ஆர்வலரும் ASFPA சட்டத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். ‘People Resurgence and Justice Alliance’ என்ற பெரருடன் அவரது கட்சி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

இவர் தனது இந்த கட்சி மூலம் வருகிற 2017 இல் நடக்க இருக்கும் தேர்தகளில் மணிப்பூரில் முதல்வர் ஒக்ரம் இபோபிக்கு எதிராக அவரது தொவ்பல் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது தொகுதியான குராய் தொகுதியிலும் அவர் போட்டியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது தேர்தல் அவதாரம் குறித்து அவர் கூறுகையில், “AFSPA சட்டத்தை திரும்பப் பெற நான் முதல்வராக வேண்டும். இபோபி தனது தொகுதி மக்களை திருப்தியாக வைத்துள்ளதால் அவர்கள் என்னை ஒதுக்கக் கூடும். அதே வேளையில் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களும் குறிப்பாக மலைவாழ் மக்களும் திருப்தியாக உள்ளனரா என்பதை நான் அறிய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய நோக்கம் AFSPA சட்டத்தை திரும்பப் பெறுவது என்பதனால் தான் முதல்வருடன் மோதுவதாக அவர் தெரிவித்துள்ளார். வர இருக்கும் தேர்தலில் தங்கள் கட்சியில் 20 பேர் போட்டியிடப்போவதாகவும் அதில் நான்கு பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரும்புப் பெண்மணி என்று அழிக்கப்படும் இரோம் ஷர்மிளா ASFPA சட்டத்தை திரும்பப் பெற வேண்டி 16 வருடங்கள் உன்ன விரதம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.