புதிய விடியல் – 2019 மார்ச் 01-15

சந்தைப்படுத்தப்படும் தேசபக்தி!

இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் தேசவிரோதமாக மாறி வருகின்றன. ஏற்கனவே சங்பரிவாரின் போலி தேசியவாதத்தையும் மத சகிப்பின்மையையும் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர். பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இப்போது தேசப்பற்றிற்கு தங்களுடைய பாணியில் புதிய வரைவிலக்கணத்தை எழுதி வருகின்றனர். அலிகர் பல்கலைக்கழகத்தில் சங்பரிவார் ஏஜண்ட் செய்தி சேனலான ரிபப்ளிக் டி.வி.யின் ஆணவப்போக்கையும், அவதூறான செய்தி ஒளிபரப்பையும் குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது உத்தர பிரதேச அரசு தேச துரோக வழக்கை பதிவு செய்தது. பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது. சங்பரிவாருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை கேரள மாநில இடதுசாரி அரசும் நிரூபித்துள்ளது. ‘காஷ்மீர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை எதிர்ப்போம்’ என்று சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது அங்கு தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

3. நிகரற்ற அற்புத நூல்

மனிதகுல வரலாறு நெடுகிலும் உலகுக்கு இறைத்தூதர்களாக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் தமது தூதுத்துவத்தை உறுதிப்படுத்தி மக்களை சத்திய மார்க்கத்தில் இணைப்பதற்காக பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த ஆற்றலை அல்லாஹ் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் வழங்கியிருந்தான்.

இறுதி இறைத்தூதராக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தம் தூதுத்துவத்தை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாகவே அல்குர்ஆன் காணப்படுகிறது.

முன்னைய இறைத்தூதர்களுக்கு தடியை பாம்பாக மாற்றுதல், மரணித்தவரை மீண்டும் உயிர் பெறச் செய்தல், நோயாளிகளை தொடுவதன் மூலம் சுகமடையச் செய்தல் போன்ற பௌதீக ரீதியான அற்புதங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அல்குர்ஆன் என்பது அறிவுப்பூர்வமான அற்புதமாக திகழ்கின்றது. புலக்காட்சிகள் மூலம், செய்கைகள் மூலம் அற்புதத்தை நிகழ்த்தாமல் அல்குர்ஆன் மனித அறிவின் மூலம் புரிந்து கொள்கின்ற அற்புதமாகவே திகழ்கின்றது.  மேலும் படிக்க

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘எஸ்.ரா.’வுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்

அடியேனது பிரியத்திற்குரிய சகோதரர், அண்மையில் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் எழுதி விகடன் பிரசுரமாக (716) டிசம்பர் 2012இல் வெளிவந்த நூல் ‘எனது இந்தியா’. 464 பக்கங்கள். அந்த நூலில் பக்கம் 205இல் அலாவுதீன் கில்ஜி, மதுவை ஒழித்தது, உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியது போன்ற பல சாதனைகளைப் பட்டியலிடுவார்.

அந்த நூலில் பக்கம் 63இல் அடியேனது ‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ நூலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். (அண்மையில் அந்த நூலை ‘இலக்கியச்சோலை’ மறுபதிப்பு செய்துள்ளது). ‘எனது இந்தியா’ என்ற அவரது நூலில் பக்கம் 232 முதல் 236 வரை வெளிவந்துள்ள கட்டுரை ‘செருப்பு ஊர்வலம்’. அதில் பக்கம் 234இல் முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் பற்றி குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அவரே தொடர்ந்து சொல்கிறார்: ‘இதை நிரூபணம் செய்யும் சான்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. மேலும் படிக்க

சாகித்ய அகாடமி விருது பெற்ற குளச்சல் யூசுஃப் பேட்டி

2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் புதிய விடியல் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உங்களது எழுத்துப்பணி மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக!

மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருடன் மணியன்பிள்ளை’ நூலுக்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2010லேயே பஷீரின் எழுத்துக்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டு விட்டது. ஆகவே, இவ்விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் ஏதும் உள்ளதா?

கிடைக்குமென்ற நம்பிக்கையே இல்லாதபோது வருத்தம் ஏற்படுவதற்கான இடமே இல்லை. முதல் காரணம், இப்படியான ஒரு விருதை வாங்குவதற்கான பொருளாதார நிலையோ, அனுசரணை சீலமோ, அவர்களே இனம் கண்டு கொள்வதற்கான செல்வாக்கோ இல்லாதவன் நான். பரிந்துரைக்கச் சொல்வதை அவமானமாகக் கருதுபவன். பரிந்துரை செய்யட்டுமா என்று கேட்டவர்களைக்கூட பேசாமலாக்கிய திறன் பெற்றது எனது நாவின் தடித்தனம். மேலும் படிக்க

ஆப்ரேஷன் கரோகே: அரசியல் தரகர்களாக நடிகர்கள்!

இந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு புறம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் அரசியல் சார்ந்த திரைப்படங்களில் நடித்து மூன்று மணி நேரத்திற்குள் நாட்டை திருத்தும் யோசனையை அரசியல் சினிமா ஞானிகளான சில டைரக்டர்களின் உதவியுடன் நடிகர்கள் வெளிப்படுத்தி தங்களை தலைவனாக காட்டிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி நாட்டில் எந்த ஒரு திட்டம், பிரச்சனை வந்தாலும், அதுபற்றி எதுவும் தெரியாவிட்டாலும் டிவிட்டரில் கருத்திடுவது இந்த நடிகர்களின் வாடிக்கை.

உதாரணத்திற்கு, நாட்டு மக்களின் பொருளாதாரத்தையே சிதைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நடவடிக்கைக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆர்.ஜே. பாலாஜி வரை அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் தமிழ் நடிகர்களான இம்மூவரும் தங்கள் கருத்தை வாபஸ் பெற்றனர் என்பது வேறு கதை. ஒரு விசயம் பற்றி தெரியுமோ… தெரியாதோ… ஒரு கருத்தை போட்டுவிட்டால் அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி விளம்பரப்படுத்திவிடும் என்பதால் அவர்கள் இதே பாணியை தொடர்கின்றனர். மேலும் படிக்க

உலக மகளிர் தினம் மார்ச் 08

உலக வரலாற்றில் ‘உலக மகளிர் தினம்’ அறிவிக்கப்பட்ட சம்பவமே வினோதமானது, விசித்திரமானது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் பணியாற்றினர். பெண்கள் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர். 1789ம் ஆண்டு பிரன்சு புரட்சியின் போது “சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம்” என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் அமெரிக்கப் பெண்களும் இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் போராடத் தொடங்கினர். 1857 மார்ச் 08 அன்று கிளர்ச்சியில் ஈடுபட்ட பெண்கள் கல்வி, ஊதியத்தில் சமஉரிமை கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசாங்க உதவியுடன் ஆணாதிக்க சமூகத்தால் இந்த போராட்டமானது அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன்பின் 1910ல் நடைபெற்ற பெண்கள் உரிமை மாநாட்டில் மார்ச் 08 மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் படிக்க