புல்வாமா தாக்குதல்: அரசியல் செய்யும் பா.ஜ.க.!

புல்வாமா தாக்குதல்: அரசியல் செய்யும் பா.ஜ.க.!

கஷ்மீர் மாநிலம் புல்வாமா நகரில் பிப்ரவரி 14 அன்று மத்திய ரிசர்வ் காவல் படையான சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 கொல்லப்பட்டனர். கஷ்மீரில் போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 78 வாகனங்கள் 2547 சி.ஆர்.பி.எஃப். வீரர்களை ஏற்றிக்கொண்டு ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றபோது ஆதில் அஹமது என்ற தீவிரவாதி 350 கிலோ வெடிமருந்துகள் கொண்ட வாகனத்தை இராணுவத்தினர் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தியதில் இந்த பேரழிவு ஏற்பட்டது. 350 கிலோ வெடிமருந்துகள் என்று முதலில் கூறப்பட்டாலும் இந்த தாக்குதலில் 80 முதல் 135 கிலோ வரையிலான வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நேஷனல் பாம் டேட்டா சென்டரின் முதல்கட்ட விசாரணை தெரிவித்ததாக தி வீக் வார இதழ் தெரிவித்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். 2002ல் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு பெயர்களில் அதன் செயல்பாடுகள் தொடர்கின்றன.

‘தீவிரவாதத்தின் முதுகெலும்பை முறிப்போம்’ என்று இரண்டு வாரங்களுக்கு முன் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொடூரமான, கோழைத்தனமான இந்த தாக்குதலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்டித்தனர், தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பல நாட்டுத் தலைவர்களும் இத்தாக்குதலை கண்டித்தனர். தாக்குதல் நடைபெற்று ஐந்து நாட்கள் கழிந்த பின்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இத்தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டார். இந்தியா ஆதாரங்களை வழங்கினால் அது குறித்து விசாரணை நடத்துவோம் என்று கூறினார். தாக்குதலுக்கு மசூத் அசார் பொறுப்பேற்றுள்ளார். அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இத்தாக்குதல் நடைபெற்ற அடுத்த நான்கு நாட்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்ற என்கௌண்டரில் நான்கு இராணுவத்தினர், ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் இந்த என்கௌண்டரில் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். பொதுமக்களில் ஒருவரும் இந்த என்கௌண்டரில் கொல்லப்பட்டார்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்