மத அரசியல் செய்யும் பா.ஜ.க. இந்துகளுக்கு என்ன செய்தது?

மத அரசியல் செய்யும் பா.ஜ.க. இந்துகளுக்கு என்ன செய்தது?

`இது இந்துக்களுக்கான கட்சி’ என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு நோட்டில் எழுதி மனப்பாடம் செய்ய மட்டும்தான் சொல்லவில்லை. மற்றபடி மூச்சுக்கு முன்னூறு முறை Ôநாங்கள் இந்துக்களுக்கான கட்சி’ என்று கூவுபவர்களிடம், Ôசார் Ôநீட்’ தேர்வுங்குற பேர்ல நம்ம இந்துக்கள படிக்க விடமாட்றாங்க. வாங்க போராடலாம்’ என்று கைகோர்த்தால், ÔÔதம்பி பழக்கவழக்கமெல்லாம் கலவரம் செய்றதோட நிறுத்திக்கணும். படிக்கணும்னு ஆசப்படக்கூடாது” என தட்டி விடுகிறது பாரதிய ஜனதா கட்சி.

Ôகலவரம் செய்யவும், பிரியாணி அண்டா திருடவும் மட்டும்தான் நாங்களா?’ என்று இந்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால், Ôதேசபக்தி இல்ல. தேசத்துரோகி. நாட்டுப்பற்று’ என்று சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ பேசுகிறார்கள். இந்துக்களுக்காக பாஜக நடத்திய போராட்டம் என தேடினால், ÔÔழிஷீ ஸிமீsuறீt திஷீuஸீபீ” என்று கூகுள் கைவிரிப்பதைப் போல, இந்துக்களுக்காகவும் பா.ஜ.க கைவிரித்திருக்கிறது.

Ôஆப் கி சர்கார்’ என்று அடிக்கடி கூறும் மோடியின் அந்த Ôஆப்’ யார் என்பதை கட்டுரையின் இறுதியில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். சரி. குஜராத் மாடல் என்று இவர்கள் தூக்கிக்கொண்டு திரியும் குஜராத்திலிருந்தே தொடங்குவோம். குஜராத்தில் உள்ள உனா நகரில் கடந்த 2016-ம் ஆண்டு பசுமாட்டை கொன்றதாகக் கூறி, அசோக் சர்வைய்யா, வஸ்ரம் சர்வைய்யா, ரமேஷ் சர்வைய்யா, பேச்சர் சர்வைய்யா ஆகிய நான்கு இந்துக்கள் சிவசேனாவைச் சேர்ந்த குண்டர்களால் நடுத்தெருவில் போலீஸ் நிலையம் அருகே நிர்வாணமாக தாக்கப்பட்டனர். அங்கிருந்தவர்கள் சுற்றிப் பார்த்த போது, Ôஇந்துக்களின் அரண்’ என்று சொல்லும் ஒரு பா.ஜ.க.வினர் கூட தடுக்க வரவில்லை.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்