மணிப்பூர் மாநிலம் கேயராவ் மக்டிங் கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்ற முஹம்மத் ஹம்சத் அலி. 55 வயதுடைய இவர் கேய்ராவ் மக்டிங் அரசு மதரசாவில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். ஞாயிறு இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு 8 மணிக்கு வெளியே சென்ற இவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் அவர் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் மர்ம நபர்களால் அடித்துக் கொள்ளப்பட்டு பிணமாக கிடந்தார்.
இவரை பசு மாட்டை திருவிட்டார் என்று குற்றம் சாட்டி அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். இவருடைய உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் துவங்கப்பட்டுள்ளது.
இவரது இந்த கொலையால் கேயராவ் மக்டிங் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு காவல் துறையிடம் முறையிட்டனர்.
இதனால் இம்பால் யைரிபோக் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அங்கும் இந்துத்துவ கும்பல்களின் கை ஓங்கி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.