மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான MCOCA சட்டத்தை நீக்கியது குறித்து வழக்கு

0

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான MCOCA சட்டத்தை நீக்கியது குறித்து வழக்கு

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட MCOCA சட்டத்தம் தளரத்தப்பட்டது. இதனை எதிர்த்து அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவரின் தந்தை NIA நீதிமன்றத்தில் தலையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

2008 மாலேகான் குண்டு வெடிப்பில் தனது மகனை இழந்த நிசார் அகமத் செய்யத் பிலால் என்பவர் தொடர்ந்த இந்த தலையீட்டு வழக்கை சிறப்பு நீதிபதி வினோத் பதல்கர் விசாரிப்பார் என்று தெரியவந்துள்ளது. முன்னர் 2017 இல் பாம்பே உயர் நீதிமன்றத்தில் சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்குவதை எதிர்த்து அவர் தலையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட MCOCA சட்டம் ஏன் தளர்த்தப்பட்டது என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

2008 டிசம்பர் மாதம் மாறுதலுக்கு உள்ளான UAPA சட்டத்தில் யாரையும் விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவிடம் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும் என்றுள்ள போது புரோஹித்தை UAPA வின் கீழ் விசாரிக்க அரசு இன்னும் ஏன் குழுவை அமைக்கவில்லை என்று வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் ஷிவ்டே கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி புரோகித்தை UAPA வின் கீழ் விசாரிக்க அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அளித்த அனுமதி தவரானது என்றால் புரோகித்தை விசாரிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து NIA மற்றும் புரோகித் தரப்பு பிலால் அவர்களின் இந்த மனுவிற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 5 ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதான வழக்கு பதிவு குறித்து தினசரி அடிப்படையில் விசாரித்து அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லுமா என்ற வாதங்களை கேட்கப்போவதாக அறிவித்தது. இதன் பினர் சமீர் குல்கர்னி, கர்னல் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுதாகர் சதுர்வேதி, அஜெய் ராகில்கர் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் மீது நீதிமன்றம் குற்றப்பதிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது. இவர்கள் மீது தீவிரவாத வழக்குப் பிரிவு 15, 16 மற்றும் UAPA வழக்குப் பிரிவு 18 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

Comments are closed.