மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு

0

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கர்னல் புரோஹித், பிரக்யா சிங் தாகூர் மற்றும் மேலும் ஐந்து நபர்கள் மீது UAPA சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும் கடந்த செவ்வாய் கிழமை குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீவிரவாத செயலில் பங்குதாரராக இருந்துள்ளனர் என்று UAPA சட்டத்தின் கீழும், இவர்கள் கிரிமினல் சதித்திட்டம் தீட்டியதாக இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வினோத் பதல்கர் இவர்கள் மீதான இந்த குற்றப்பதிவை அறிவித்தார். முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமால் வழக்கு விசாரணையை தாமதிப்பதாக இவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டித்து எச்சரித்தார்.

தற்போதைய குற்றப்பதிவு என்பது இனி இது தொடர்பான விசாரணைக்கு முதல் கட்டமாகும். கர்னல் புரோஹித், ஸாத்வி பிரக்யா சிங் தவிர்த்து ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜெய் ராகிர்க்கர், சுதாகர் தீவேதி, சுதாக்கர் சதுர்வேதி, மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் மீதும் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றங்களை நீதிபதி வாசிக்க இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

Comments are closed.