மாலேகான் குண்டு வெடிப்பு: கர்னல் புரோஹித்தின் மனுவை விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

மாலேகான் குண்டு வெடிப்பு: கர்னல் புரோஹித்தின் மனுவை விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாகூர், உள்ளிட்ட பலர் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி துவக்கியது. இந்நிலையில் தன்னை முறையான ஒப்புதல் இல்லாமல் கடுமையான UAPAசட்டத்தின் கீழ் விசாரிப்பதாக கர்னல் புரோஹித் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தன்னை UAPA சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு மறுப்பு இருந்தால் அது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் புரோஹித்திற்கு ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதியளித்தது. ஆனால் புரோகித்தின் மனுவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்து அவர் UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது சரியே என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், புரோகித் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் சால்வே, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்சிடம், தனது மனுவை பரிசீலிக்காமல் புரோஹித்திற்கு எதிராக விசாரணை நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது என்று முறையிட்டார். நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி S.K.கவுல் மற்றும் நீதிபதி K.M. ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருகிற நவம்பர் 21ஆம் தேதிக்குள் புரோஹித்தின் மனுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் மற்றும் மேலும் ஐந்து பேர் மீது குற்றப்பதிவு செய்து விசாரணையை நவம்பர் 2ஆம் தேதி துவக்க உத்தரவிட்டது. இத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அபினவ் பாரத் என்ற இயக்கத்தை தீவிரவாதத்தை பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் துவக்கியுள்ளனர் என்று கூறி அவர்கள் மீது UAPAசட்டத்தின் கீழும், கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல் கொலை முதலிய குற்றங்களுக்காகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

6 நபர்களை கொன்று 100 நபர்களை காயப்படுத்திய இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் மேலும் UAPA சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பதிவு செய்தது.

Comments are closed.