மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்தின் மனுவை தள்ளுபடி செய்தது பாம்பே உயர் நீதிமன்றம்

0

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்தின் மனுவை தள்ளுபடி செய்தது பாம்பே உயர் நீதிமன்றம்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தனக்கு எதிராக கடுமையானUAPA சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவது சரியல்ல என்றும் அதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி கர்னல் புரோஹித் அளித்த மனுவை பாம்பே உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புரோஹித்தின் இந்த மனுவை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம் அவருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாகூர், உள்ளிட்ட பலர் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி துவக்கியது. தன்னை முறையான ஒப்புதல் இல்லாமல் கடுமையான UAPAசட்டத்தின் கீழ் விசாரிப்பதாக கர்னல் புரோஹித் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

6 நபர்களை கொன்று 100 நபர்களை காயப்படுத்திய இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் மேலும் UAPA சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Comments are closed.