மைசூர் சிறையில் விசாரணை சிறைவாசி யாக இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் குத்திக் கொலை

0

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பிரஷாந்த் பூசாரி என்பவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரனைகைதியாக இருந்த முஸ்தஃபா கவூர் என்பவரை கிரண் ஷெட்டி என்பவன் சிறையில் வைத்து குத்திக் கொன்றுள்ளான். இந்த கொலை அவர் சிறையில் இருந்து வெளிவர இருக்கும் ஒரு நாளுக்கு முன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொலையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளதோடு இதில் சங் பரிவாரத்தின் கைகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், கொலை செய்யப்பட்ட முஸ்தஃபா கவூர் சிறந்த சமூக சேவகர் என்றும் ஒடுக்கபப்ட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிறந்த களப்பணியாளர் என்றும் அவர் பிரஷாந்த் பூசாரியின் கொலை வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டு சிறையில் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த வேலையில், தான் நிரபராதி என்று நிரூபிக்கும் முன்னரே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று யாசிர் ஹசன் கூறியுள்ளார்.

“மேலும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. சமூகத்தின் அமைதியை குலைத்து மத மோதல்களை தூண்டுவதற்காக இந்த கொலை முனந்தாகவே திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தியிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகிகின்றோம்.” என்று யாசிர் ஹசன் கூறியுள்ளார்.

“இந்த கொலைக்கு முந்தய தினம் மைசூர் எம்.பி.பிரதாப் சின்ஹா சிறைக்கு தொடர்ச்சியாக சென்று வந்துள்ளார். அவர் அனைத்து இடங்களிலும் விஷக் கருத்துகளை கூறி எங்கும் வெறுப்பை பரப்பி வந்தவர். இந்த கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.. மேலும் இந்த கொலையில் சங் பரிவாரத்தின் பங்கும் உள்ளது” என்று யாசிர் கூறியுள்ளார்.

இந்த கொலை குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டால் தான் உண்மை வெளிவரும் என்றும் தங்களது பணிகளை சரிவர செய்யாத சிறைத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உயிரிழந்த முஸ்தஃபாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

தங்களது இந்த நிபந்தனைகள் ஏற்கப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மாநில மக்கள் சங் பரிவாரத்தின் வெறுப்பு கொள்கைகளை அமைதியின் மூலமும் சகோதரத்துவத்தின் மூலமாக தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments are closed.