மோடி அரசின் முழு ஆதரவுடன் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகள்!

மோடி அரசின் முழு ஆதரவுடன் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகள்!

16 மாநிலங்களில் அமைந்திருக்கும் காடுகளில் வாழும் 11,27,446 பழங்குடியினரை காடுகளை விட்டு உடனடியாக வெளியேற்றுமாறு பிப்ரவரி 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு அசாதாரணமானதும் மிகுந்த கவலைக்குரியதுமாகும். 2019 ஜூலை 12-ஆம் தேதிக்குள் இவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநிலங்களின் முதன்மை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பழங்குடியினர் இல்லாத காடுகளை குறித்து நாம் கற்பனைச் செய்து கூட பார்க்க இயலாது. காடுகளில் வாழும் விலங்குகள், பறவையினங்கள் போலவே அங்கு வாழும் பழங்குடிகளும் அதிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாவர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் யதார்த்தமாகும். பல்லாண்டுகளாக காடுகளில் வாழும் இவர்களை கூட்டமாக வெளியேற்றிவிட்டு காடுகளின் பாதுகாப்பு என்பது அசாத்தியமானது. பழங்குடிகள்தான் காடுகளின் உண்மையான வாரிசுகள். பெரும்பாலும் வெளியுலகத்தோடு இவர்களுக்கு எவ்விதமான தொடர்பும் கிடையாது. கடந்த சில தசாப்தங்களாகத்தான் இவர்கள் நாட்டு மக்களோடு தொடர்புக்கு வந்தனர். அரசு உதவி மற்றும் நலத்திட்டங்கள் மூலம் இவர்கள் வெளியுலத்தோடு இணைந்து வாழ பழகினர். சமூக ரீதியாக இவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.

மத்திய அரசு அவர்களை பட்டியலினத்தவர்களில் சேர்த்துள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக அரசு இவர்களுக்காக அறிவித்துள்ள சலுகைகள் எதுவும் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்தியாவில் பழங்குடிகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இவர்களில் சிறுபான்மையினரே நவீன நாகரீகத்தை ஏற்றுக் கொண்டவர்கள். பழங்குடிகளின் நிலைமை இவ்வாறிருக்கும்போதுதான் யதார்த்தங்களையெல்லாம் மறந்துவிட்டு அவர்களை கூட்டமாக காடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்