யோகா குரு பாபா ராம்தேவிற்கு மோடி அரசாங்கம் உல்லாச மாளிகை அமைக்க தீவு வழங்குகிறது

யோகா குரு பாபா ராம்தேவிற்கு பசுமையான காண்பதற்கு அழகான கலங்கரை விளக்கு அமைக்கப்பட்ட தீவை வழங்க இருக்கிறதாக கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை கட்காரி PHDCC தொழில்துறை அமைப்பு ஒன்று ஏற்படுத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியுள்ளார். இதே போல 70 தீவுகளை உருவாக்க உள்ளதாகவும் அதனை யோகா மையங்களாக அமைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த யோகா தீவுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விளம்பர பட தயாரிப்பாளர் பிர்லாட் கக்கார் உடன் இணைந்து அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் சிங்கியு(Cinque) தீவையும், லக்சதீப் தீவுகளில் மினிகாய் (Minicoy) தீவையும் சுற்றுப்புற சூழலோடு இணைந்த சொகுசு மாளிகைகளை அமைக்கவும் தண்ணீர் விளையாட்டுக்கள் மற்றும் நீர் மூக்கி விளையாட்டுகளுக்காக என அமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோகா குரு ராம்தேவ் இதே போல ஸ்காட்லாந்தில் தனி தீவு ஒன்றை வாங்கி அதில் யோகா மடம் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.