வீட்டில் முடங்கிக் கிடைந்தவர்களை வீதியில் இறங்க வைத்த போகிமான் கோ

0

கூகிள் நிறுவனத்தின் Ingress என்ற விளையாட்டை மையமாக வைத்து நைடெண்டோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது போகிமான் கோ விளையாட்டு. பொதுவாக கணினி விளையாட்டுகள் அனைத்தும் விளையாடுபவரை ஒரு திரைக்கு முன்னர் அமர்த்தி அங்கிருந்து நகர விடாமல் செய்வது தான் வழக்கம். ஆனால் இந்த விளையாட்டை பொறுத்தவரை நம் இருப்பிடத்தை விட்டு நகர்ந்து நம்மை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றால் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.

போகிமான் எனப்படும் விலங்குகளை நம்மை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று பிடிப்பதும் பிடித்த விலங்குகளை வைத்து பிறருடன் போட்டியிடுவதும் தான் இந்த விளையாட்டின் சிறப்பம்சம். போகிமான்களை பிடிப்பதற்கு மட்டுமல்லாமல் பிறருடன் போட்டியிடுவதற்கும் கூட நம் இருப்பிடத்தை விட்டு வெளியேறி இதற்கென பிரத்யேகமான போகிமான் ஜிம் எனப்படும் இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆக வீட்டில் சொகுசாக அமர்ந்து விளையாடும் காலம் போய் மக்களை வீதியில் ஓட வைத்இருக்கிறது இந்த போகிமான்

இந்த விளையாட்டு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களிடம் ஏக போக வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இந்த விளையாட்டு அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளிப்படாத நிலையில் அதிகாரபூர்வமாற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கிவிட்டனர் ஆர்வலர்கள்.

இந்த விளையாட்டு காரணமாக தற்பொழுதே ஒரு விபத்து அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. போகிமான் கோ விளையாடிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற அறிவிப்புகள் அங்கு பரவலாகி வருகின்றன.

மேலும் மற்றொரு நிகழ்வில் காவல்நிலையம் ஒன்றில் போகிமான் ஒன்று இருப்பதால் அந்த காவல்நிலையத்திற்குள் விளையாட்டு ஆர்வலர்கள் கூட்டம் கூட்டமாக சென்ற நிகழ்வும் நடந்துள்ளது.

குவைத் நாட்டு அரசு தங்கள் நாட்டின் பல இடங்களில் இந்த விளையாட்டை விளையாட தடை விதித்திருக்கிறது.

இந்த விளையாட்டை விளையாட இணைய இணைப்பு  தேவை என்பதால் பல நாடுகளில் போகிமான் கோ விற்கு என பிரத்யேக இணையதள திட்டங்களை தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்க உள்ளன.

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்னும் இவ்விளையாட்டு அறிவிக்கப்படாத நிலையில் ஏற்கனவே ஆர்வலர்கள் இதனை பதிவிறக்கம் செய்து விளையாடத் துவங்கிவிட்டனர்.

பல பெற்றோர்களுக்கு வீட்டில் முடங்கிக் கிடந்த தங்களது பிள்ளைகள் தற்போது நிஜ உலகை சென்று பார்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கவனத்திற்கு:

  • தங்களது சுற்றுப்புறத்தை கவனித்து பாதுகாப்பாக விளையாடுவது சிறந்தது.
  • இது அலைபேசியின் பாட்டரியை  அதிக்கபடியாக பயன்படுத்துவதால் முழுவதும் சார்ஜ் செய்துவிட்டு விளையாட செல்வது சிறந்தது.
  • உங்களது அலைபேசியின் இனையதள இணைப்பை இந்த விளையாட்டு பயன்படுத்துகின்றது. மிகவும் குறைந்த அளவிலேயே இணைய இணைப்பை பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டாலும் உங்கள் இணைய பயன்பாட்டின் மீது ஒரு கவனம் இருப்பது அவசியம்.
  • சாலைகளில் செல்லும் போதும், வாகனங்கள் ஓட்டும் போதும் விலையாவதை தவிர்ப்பது சிறந்தது.
  • அதிகாரப்பூர்வமாக இவ்விளையாட்டு செய்யலி அறிவிக்கப்படாத நிலையில் இந்த விளையாட்டு செயலியை வேற்று தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது சிறந்தது. இத்தகைய செயலிகள் மூலம் ஹாக்கர்கள் உங்கள் தகவலை திருடும் வாய்ப்புய் அதிகம்.

 

Comments are closed.