வெடிகுண்டுகளை தயாரிக்கும் போது பாஜக உறுப்பினர் மரணம்


மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கொசாபா வெடிகுண்டு தயாரிக்கும் போது பாஜக உறுப்பினர் சோபன் தேப்நாத் மரணமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
வெடிகுண்டுகளை தயாரிக்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்தது தெளிவாகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆளில் தங்களின் உறுப்பினர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் இத்தாக்குதலை நடத்தியதாக பாஜக கூறுகிறது. கொசாபா சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 1 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக உறுப்பினர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.