தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதைஉறுதி செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி T.S சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த போராட்டம் சட்டபூர்வமானதாக இல்லை என்றாலும், ‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது’ என்றும், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு திங்கள்கிழமை, மே 2018 இல் 13 பேரைக் கொன்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் முடிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment.