ராஜஸ்தான் பொதுப்பணித் துறை நடத்திய ராஜஸ்தான் நிர்வாக பணிகளுக்கான தேர்வில் பங்கெடுப்பதற்காக சென்ற முஸ்லீம் மாணவி ஒருவரை அவரது ஹிஜாபை கழட்டிவிட்டு தேர்வு எழுத செல்லுமாறு வற்புறுத்தியுள்ளது ராஜஸ்தான் போலீஸ்.
சதாப் நசீம் என்ற மாணவி தனக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை விவரிக்கும் போது கூறுகையில் , இந்த நிகழ்வால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். புது டில்லி வாசியான இவர் ராஜஸ்தான் போலிஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.மேலும் தேசிய சிறுபான்மை கமிஷனிடமும், பெண்கள் உரிமை அமைப்புகளிடமும் இது குறித்து முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
தேர்வு நாள் அன்று அவர் தேர்வுக்கு செல்லும் வேலையில் அங்கிருந்த பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் அவர் அணிந்த ஹிஜாபை கழட்டினால் தான் தேர்வெழுத அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளார். இவர் இதனை மறுக்கவே அங்கிருந்த ஆண் காவல் துறை அதிகாரிகளும் கூடி இவரை நிர்பந்திதுள்ளனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்வதினால் தேர்வு வீணாகிவிடும் என்ற காரணத்தினால் அவர்கள் நிர்பந்தித்தது போல ஹிஜாபை கலட்டியுள்ளார் சதாப். பின்னர் அவர் அணிந்திருந்த தலை முக்காட்டையும் கழட்டச் செய்துள்ளனர் ராஜஸ்தான் காவல் துறையினர்.
இந்த நிகழ்வு இந்திய அரசியல் சாசனம் எனக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் தன்னை அவமானத்திற்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்வில் ஏமாற்று வேலைகளை தடுக்கவேண்டும் என்றால் அதற்காக பல தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்றும் என்னுடைய கண்ணியத்தில் விளையாடுவது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை என்றும் கூறியுள்ளார்.
தேர்வு எழுத வரும்போதே கிரிமினல் குற்றவாளிகளை போல நடத்தப்படும் இவர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
You must be logged in to post a comment.