ஹிஜ்ரத்: நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை  நட்சத்திரம்!

ஹிஜ்ரத்: நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை  நட்சத்திரம்!

ஹிஜ்ரி 1441 – இஸ்லாமிய உலகம் மற்றுமொரு புத்தாண்டில் சஞ்சரிக்கத் தொடங்கி விட்டது. புத்தாண்டு என்பது கொண்டாட்டத்திற்கு உரிய ஒன்று இல்லை என்ற போதிலும் இஸ்லாமிய ஆண்டின் துவக்கத்தை குறிக்கும் வகையிலான ஹிஜ்ரத் எனும் நிகழ்வு நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் புதிய நம்பிக்கையினை பிறக்கச் செய்கின்றது. ஹிஜ்ரத் உண்மையில் முஹர்ரம் மாதத்தில் நடைபெறவில்லை என்றாலும் இஸ்லாமிய காலண்டர் முறையை அறிமுகம் செய்த உமர் (ரலி) அவர்கள் ஸஹாபாக்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகு ஆண்டின் துவக்கத்தை குறிப்பதற்காக தீர்மானித்த மாபெரும் வரலாற்று நிகழ்வுதான் ஹிஜ்ரத்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் பல்வேறு அற்புதங்களும், முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தாலும் ஹிஜ்ரத் எனும் நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் இன்னும் சொல்லப்போனால் பூமிப்பந்தின் சுழற்சியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்