எங்கள் வீடியோவை வெளியிட அனுமதிக்கக்கூடாது – நீதிமன்ற படியேறிய 6 பாஜக அமைச்சர்கள்

தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவிதமான வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரான ராஜேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோவால் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், “தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவிதமான வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது” என்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார், விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண கவுடா, கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி சோமசேகர், நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி பசவராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்களும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.