மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: புரோகித் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம். UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு

0

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: புரோகித் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம். UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு

2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான புரோகித் மற்றும் பிரக்யா சிங் ஆகியோர் தங்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழான விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அளித்த மனுவை NIA சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அனைத்து குற்றவாளிகளும் UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரோகித்கின் மனுவை நிராகரித்த NIA சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் படல்கர், புரோகித் மற்றும் பிரக்யா சிங் மீது 2009 ஜனவரி 17 ஆம் தேதி மற்றும் 2011 ஏப்ரல் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செல்லும் என்று கூறி உத்தரவிட்டார். இதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, அஜெய் ராகிர்க்கர், சுதாகர் திவேதி மற்றும் சுதாகர் சதுர்வேதி ஆகியோர் தீவிரவாத சதித்திட்டம் மற்றும் அவர்களின் செயல்களுக்காக UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். இத்துடன் இவர்கள் இந்தியா குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழும் கொலை, கொலை முயற்ச்சி, சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் வெடிபொருட்களை சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுவார்கள். தற்போதைய இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டபட்டவர்கள் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செயலாம்.

 

Comments are closed.