புதுச்சேரி மாநில சட்டபேரவை தேர்தலில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக இணைந்து கூட்டணி அமைத்து உள்ளது. 16 தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கையெழுத்து ஆனது. இதையடுத்து தற்போது 4 எம்எல்ஏக்கள் இருப்பதால் தங்களுக்கு 7 சீட் வழங்க அதிமுக வலியுறுத்தியது. ஆனால் 4 சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜக கூறியதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி மாநில அதிமுக பொறுப்பாளர் எம்சி சம்பத், பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து சீட் குறித்து பேசினார். இதில் 3 சீட் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கபடும் என்று பாஜக தெரிவித்தது. தற்போது 4 எம்எல்ஏக்கள் உள்ள தங்களுக்கு 3 சீட் கொடுப்பதால் என்று ஆத்திரமடைந்த மாநில செயலாளர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எம்சி சம்பத் தலைமையில் சென்னை புறப்பட்டு சென்றனர்.
அங்கு ஓபிஎஸ், எபிஎஸ் ஆகியோரை சந்தித்து பாஜகவின் சீட் விபரம் குறித்து தெரிவித்தனர். பாஜக கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் கைவிரித்து விட்டார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
3 சீட் கிடைத்தால் நமக்கு அவமானம் என்பதால், கட்சியின் இருப்பதா? வேண்டாமா? என்று அதிமுக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக, என் ஆர் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை வெளியிட முடியாமல் தவித்து வருகிறது.
You must be logged in to post a comment.