அஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்

0

கடந்த 3 ஆண்டுகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புக்காவல் மையங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20க்கும் மேர்பட்டோர் என பாஜக அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை அகதிகளாக்க வேண்டி பாஜக அரசு அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அமல்படுத்தியது. அதில் சந்தேகத்திற்கு உட்பட்டு குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் குடியுரிமை பெறாதவர்கள் தடுப்புக் காவல் மையங்களுக்கு அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் இது குறித்துபதிலளித்த மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘அஸ்ஸாம் மாநில அரசு அளித்த தகவல்களின் படி பிப்ரவரி 27, 2020 படி தடுப்புக் காவல் மையங்களில் 799 பேர் உள்ளனர். அதில் 95 பேர் மூன்றுக்கும் அதிகமான ஆண்டுகள் முகாமில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் 26 பேர் உடல்நல குறைவால் இறந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) இறுதி பட்டியலிருந்து 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பெயர்கள் நீக்கப்பட்டது. இந்து மதத்தவர்களான 13 லட்சம் பேரும், இஸ்லாமியர்கள் 6 லட்சம் பேரும் ன்ஆர்சி இறுதி பட்டியலிருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.