சமூக வலைத்தளத்தில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டும் பாஜக அரசு

சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளை சேர்ந்த ஊழி­யர்­களை மத்திய அரசு மிரட்டவில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.

முன்­ன­தாக சமூக வலைத்தளத்தில் பணிபுரியும் ஊழி­யர்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்கப்படும் என பாஜக கட்சியின் ஆதரவாளர்கள் மிரட்­டல் விடுத்தனர்.

இது­கு­றித்து அறிக்கை வெளி­யிட்­டுள்ள மத்­திய தக­வல் தொழில் நுட்பத்­துறை அமைச்­சர், நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­த­படி, சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் அர­சை­யும் பிர­த­ம­ரை­யும் அல்­லது எந்­த­வொரு அமைச்­ச­ரை­யும் விமர்­சிக்க முடி­யும் என அதில் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், விமர்­ச­னங்­க­ளை­யும், எதிர்ப்­பு­க­ளை­யும் மத்­திய அரசு வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரி­விக்­கப்பட்டுள்ளது.

வன்­முறையை ஊக்­கு­வித்­தல், பர­வ­லான வகுப்­பு­வாத பிளவு, பயங்கரவாதத்தை தூண்­டு­வது போன்­றவை கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என­வும் மத்­திய பாஜக அரசு வலி­யு­றுத்தி உள்­ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.