பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறை தண்டனை

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்ஸல் அன்சாரி மற்றும் அவரின் சகோதரர் முத்தார் அன்சாரி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொலை மற்றும் கடத்தல் வழக்குகளில் இருவருக்கும் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2005 இல் படுகொலை செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணானந்தராய் கொலை வழக்கு மற்றும் 1997இல் வாரணாசியைச் சார்ந்த நந்த கிஷோர் என்ற வியாபாரியை கடத்தி படுகொலை செய்த வழக்கு ஆகியவற்றில் இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பத்தாண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அஃப்சல் அன்சாரியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகள் அவரால் தேர்தலிலும் போட்டியிட முடியாது. வழக்கு மேல்முறையீட்டில் அவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டால் அவரின் உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படும்.

Leave a Reply