– முஹம்மது இஸ்மாயில்
கோடை விடுமுறை முடிந்து 2023 – 2024 கல்வி ஆண்டுக்காக பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. கோடை விடுமுறையை குதூகலமாக கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்தச் செய்தி சற்று கசப்பாகத்தான் இருந்திடும்.
இருப்பினும் மாணவர்களுக்கு இந்தச் செய்தியை சரியான ரீதியில் எடுத்துரைத்து அவர்களை உளவியல் ரீதியாக பள்ளிக்குச் செல்ல தயார் செய்திட வேண்டும். சென்ற கல்வி ஆண்டின் இறுதியில் பள்ளியின் கடைசி நாளன்று கோடை விடுமுறையை கொண்டாடித் தீர்த்திட வேண்டும் என்ற குதூகலத்துடன் வீட்டிற்குத் திரும்பி இருப்பார்கள். இப்போது மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பிடும் போது பழைய அந்த குதூகலம் இல்லாவிட்டாலும் கூட ஓரளவு உற்சாகத்துடன் பள்ளிக்கூடம் திரும்பிடும் வகையில் மாணவர்களை தயார் படுத்திட வேண்டும்.
ஒரு மாதத்திற்கும் மேலான கோடை விடுமுறையை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பயணங்கள், தொடர் விளையாட்டுகள் என பொழுதை கழித்தவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று சொல்லிடும்போது சற்று விசனப்படத்தான் செய்வார்கள்.
பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பு ஏற்படும் சிறு பதட்டம் அல்லது கவலை என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அந்த பதட்டத்தை மட்டுப்படுத்தி குழந்தைகளை, மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்திட வேண்டும்.
இந்த கவலை, பதட்டம் என்பது ஆறு முதல் பதினேழு வயது வரையிலான குழந்தைகள்/மாணவர்கள் வரை பரவலாக காணப்படுகின்றது என்கின்றது புள்ளிவிபரம்.
கோவிட் பெருந்தொற்றின் போதும் பெருந்தொற்றிற்கு பிறகான கடந்த கல்வி ஆண்டிலும் (2022 – 2023 ) இந்த பதட்டம் சற்று அதிகரித்து இருந்தது. இருப்பினும் இந்த கல்வி ஆண்டில் (2023 – 2024 ) நிலைமைகள் சீராகிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
மாணவர்களிடம் காணப்படும் இந்த பதட்டம், கவலை குறித்து என்.சி.இ.ஆர்.டி, (NCERT – National Council of Educational Research and Training) 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022 ஜனவரி முதல் மார்ச் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது.
3.79 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட
… முழு கட்டுரையையும் படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள்.
இணைவதற்கு இங்கு செல்லவும் Click Here
சந்தாதாரராக இருந்தால் My Account ல் Login