பள்ளி ஆண்டுவிழாவில் CAA நாடகம்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற ஆண்டு விழாவின் போது 4ஆம் வகுப்பு மாணவர்கள் நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ஒரு நாடகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால் அந்த நாடகத்தில் அரசின் CAA சட்டத்தை அவமதித்திருப்பதாக கூறி இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர் புகார கொடுத்ததையடுத்து, மூன்று நாட்களுக்கு பள்ளியின் மீது இந்திய தண்டனை சட்டம் 504, 5050(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளது போன்ற புகைப்படங்கள் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “பள்ளி ஆண்டுவிழாவில் CAA நாடகம்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

  1. பாசிச பாசக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்களை அனைத்து மீடியாக்களும் எதிர்க்க வேண்டும்

Comments are closed.