CAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ

குடியுரிமை திருத்த சட்டம் உள்நாட்டுப் போா் போன்ற சூழலை உருவாக்கியுள்ளதாக, மத்திய பிரதேச மாநிலம் மைஹா் தொகுதி பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவர்: ‘குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக ஒவ்வொரு வீதியிலும் உள்நாட்டுப் போா் போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது நம்நாட்டிற்கு பேரழிவாகும். இதனால் நாட்டின் வளார்ச்சியை கற்பனை செய்ய முடியவில்லை. நான் CAA சட்டத்தை எதிா்க்கிறேன்.

CAA விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கை மீதான அதிருப்தி காரணமாக, அவா் காங்கிரஸில் இணையவுள்ளாரா என எம்எல்ஏ நாராயண் திரிபாதியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘நான் காங்கிரஸில் இணையவோ, பாஜகவில் இருந்து விலகவோ விரும்பவில்லை. வாக்கு வங்கிக்காக CAA அமலாக்கம் நடைபெற்றுள்ளது. இதனால் தேசத்திற்கு பயன் ஏற்பட போவதில்லை. இது எனது உணா்வுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலான சொந்த கருத்து.

தேசிய குடிமக்கள் பதிவு மேற்கொள்ளப்படும் போது கிராமவாசிகளால் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. ரேஷன் அட்டை பெறவே கிராமவாசிகள் அவதிப்படும்போது, அவா்களால் எவ்வாறு குடியுரிமையை நிரூபிக்க முடியும்’ என்று நாராயண் திரிபாதி கேள்வி எழுப்பினாா்.

One thought on “CAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ

  1. தேசிய குடிமக்கள் பதிவு மேற்கொள்ளப்படும் போது கிராமவாசிகளால் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. ரேஷன் அட்டை பெறவே கிராமவாசிகள் அவதிப்படும்போது, அவா்களால் எவ்வாறு குடியுரிமையை நிரூபிக்க முடியும்’

    கிராம வாசிகள் மட்டுமல்ல அன்றாடம் பிழைப்பு நடத்தக்கூடிய கோடிக்கணக்கான மக்கள் நம் நாட்டில் உள்ளனர் , 50 கோடிக்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ் நிலையில் உள்ள மக்கள் எவ்வாறு செலவு செய்து குடியுரிமையை நிரூபிப்பார்கள்

Comments are closed.