14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை!

0

காவல்நிலையத்தில் முஸ்லிம் வாலிபர் அடித்துக் கொலை:  கடையநல்லூர் – குமரி மாவட்ட காவல்துறையின் அட்டூழியம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் மசூத் அலி. 2005ம் ஆண்டு சீட்டுக் கம்பெனி நடத்திவந்தார். இவரது நிறுவனம் எதிர்பாராத வித மாக நொடிந்து போய்விட்டது. ஏமாற்றும் எண்ணம் சிறிதும் இல் லாத மசூத் பல்வேறு கஷ்டங்களுக் கிடையே டெபாஸிட் செய்திருந்த பலருடைய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருந்த சிலர் இவர் மீது வழக்கு தொடுத் திருந்தனர். தனது வழக்கறிஞர் மூலம் அந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் எதிர் கொண்டு நடத்தி வந்தார்.

இந்நிலையில் மசூதுக்கு பழக்கமான கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவர் 27.11.2005 அன்று மாலை 5 மணியளவில் அவருடைய வீட்டுக்கு வந்து, ‘நானும் எனது நண்பர்களும் கன்னியாகுமரி செல்ல வேண்டும். எனக்கு ஒரு கார் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். மசூதும் புளி யம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற டிரைவரிடம் பேசி அவர் ஓட்டிக் கொண்டிருந்த டாடாசுமோவை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அன்றிரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் கல்யாணி தனது நண்பர்களுடன் சேர்ந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் நெடுமங்காடு அருகே ஒரு காட்டு பங்களாவில் டிரைவரை அடித்து கட்டிப்போட்டுவிட்டு அதன் பிறகு அந்த டாடா சுமோவை பயன்படுத்தி விருதுநகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அரிவாளால் வெட்டி பல இலட்ச ரூபாயைக் கொள்ளையடித்தார்கள் என்றும் காரை வாடகைக்கு அமர்த்தி மசூத் இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறி, 28.11.05 அன்று மாலை 4 மணியளவில் கடையநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆரல்வாய் மொழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமணராஜ் ஆகியோர் மசூத் வீட்டிற்கு வந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மசூதுடன் கல்யாணி, டிரைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றனர்.

அன்று நள்ளிரவு 1 மணியளவில் மசூதின் மனைவி ஹஸனம் மாளை விசாரணைக்காக ஆரல்வாய் மொழி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று 29.11.05 இரவு 10 மணிவரை விசாரணை என்ற பெயரில், கணவர் குற்றம் செய்ததாகவும் அது தனக்குத் தெரியும் என்றும் ஒப்புக் கொள்ளுமாறும் மிரட்டினர்.

ஹஸனம்மாள் மறுக்கவே, அவரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி திருப்பி அனுப்பினர். அங்கிருந்து ஹஸனம்மாள் நள்ளிரவில் தன்னந்தனியாக பஸ்ஸில் ஏறி கடையநல்லூருக்கு வந்தார்.

செய்யாத தவறுக்காக பலிகடாவாக்கப்பட்ட மசூத் குமரி மாவட்ட எஸ்.பி தனிப்படைப் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரபால் என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திலிருந்து கீரிப்பாறை காவல்நி லையத்திற்கு கொண்டு சென்று குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிரட்டி, கயிற்றில் கட்டி தொங்க விட்டு கடும் சித்திரவதை செய்துள்ளார். டி.எஸ்.பி க்கள் ஈஸ்வரன் இன்ஸ்பெக்டர் லட்சுமணராஜ் ஆகியோரும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மசூதின் உயிர் பிரிந்து விடவே கல்யாணியையும் கிருஷ்ணமூர்த்தியையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மசூத் தப்பிவிட்டதாக கூறினர்.

இதனை நம்பாத ஹஸனம்மாள் முதல்வரிடம் புகார் கொடுத்து விட்டு வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்யவே வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

நெல்லை சி.பி.சி.ஐ.டி லியோ , இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான டீம் இதனை விசாரித்து சந்திரபால் உட்பட மூன்று டி.எஸ்.பிக்கள் மற்றும் இன்ஸ் பெக்டர் லட்சுமணராஜ் மீது வழக் குப் பதிவு செய்தது.

விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதை அறிந்து இவர்கள் தலைமறைவாகி விட்ட னர் (Absconding Accused). மேலும் இவர்கள் சி.பி.சி.ஐ.டி.க்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே இந்த காவல்துறைக் குற்றவாளிகளிடமி ருந்து (Police Criminal) பாதுகாப்பு வேண்டு மென்று சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

”எனது கணவரை கீரிப்பாறை காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சிகளான கல்யாணி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதிக்குத் துணையாக நிற்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ‘சிட்டி பீர்’ என்பவரோ என்னிடம் வந்து, காவல்துறையினரிடம் நஷ்ட ஈடு வாங்கித் தருகிறேன்; கேஸை வாபஸ் வாங்குங்கள்; ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெ ழுத்து போட்டுத் தாருங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன்” என்று ஹஸனம்மாள் வேதனையுடன் கூறினார்.

மனித உரிமை மீறலுக்குப் பெயர் பெற்ற டி.எஸ்.பி சந்திரபால் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் அரசுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் குமரி மாவட்ட முஸ்லிம்களால் அனுப்பப்பட்டு கொண்டு இருந்தது.

தந்தையை இழந்த 10 வயது மகன் உஸ்மான், 8 வயது மகள் சாயிரா பானுவுடன் நிர்க்கதியாக நிற்கும் ஹஸனம்மாவிற்கு முதல மைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும்; மசூத் குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்; படுகொலை செய்த காவல் துறை குற்றவாளிகளை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

மசூதை தொங்கவிட்டு உயிர் போகும் வரை அடித்தார்கள்

மசூத் கொலையை நேரில் பார்த்த தனது பெயரை வெளியிட விரும்பாத, சத்தியத்தின் பக்கம் நின்று கொண்டிருக்கும் மனிதாபிமான காவலர் ஒருவர் கூறியதாவது:

“எனக்கும் இப்பொழுது எஸ்.பி லெவலில் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மலையுடன் மோதிக் கொண்டிருக்கிறோம். என்ன நடந்தாலும் பரவாயில்லை, என்றும் நான் சத்தியத்தின் பக்கம்தான். ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு மசூதின் மனைவியை கொண்டு வந்த போது மசூதுக்கு அவருடைய மனைவி தெரியும் கோணத்திலும் அவரது மனைவிக்கு மசூத் தெரியாவண்ணமும் வைத்து இருவரையும் விசாரணை செய்தனர்.

“உன் பொண்டாட்டி இப்ப தனியாத் தான் இருக்கா. நாங்க நெனச்சா உன் பொண் டாட்டிய என்ன வேணும்னாலும் பண்ண லாம் தெரியும்ல” என்று மிரட்டியே மசூதை சித்திரவதை செய்தனர்.

இத்துணைக்குப் பிறகும் மசூத் ஒப்புக் கொள்ளாததால் மீண்டும் கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது மசூதைக் கட்டித் தொங்கவிடுவதற்கான கயிற்றை டி.எஸ்.பி சந்திரபால் தான் கொண்டு வந்தார்.

பின்புறம் கைகளைக் கட்டி கயிற்றைச் சுற்றி நாற்பது நிமிடங்கள் மசூதை தொங் கவிட்டு அடித்தனர். சித்திரவதை தாளாமல் 30.11.2005 இரவு 11 மணிக்கு மசூதின் பேச்சும் மூச்சும் அடங்கியது” என்று  அவர் கண்கலங்க கூறினார்.

ஜூலை, 2007, புதிய விடியல்

https://www.puthiyavidial.com/?p=89211&preview=true

Comments are closed.