மசூத் கஸ்டடி கொலை வழக்கு கடந்து வந்த பாதை…
டிசம்பர் 2009
2005 ஆம் ஆண்டு நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரனைக்காக கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள். விசாரணையின் போது அவரை தலைகீழாக தொங்க விட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக் கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி, கடுமையாக அடித்து சித்தரவதை செய்து கஸ்டடி கொலையில் முடித்தனர் டி. எஸ்.பி.க்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் காவல்துறை அதிகாரிகள்.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்காக நியாயம் கேட்டு தென்காசி வழக்கறிஞர் இசக்கி முத்து அவர்கள் முயற்சி எடுத்தார்.
https://www.puthiyavidial.com/?p=89210&preview=true
அதன் பிறகு இவ்வழக்கை என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தொடர்ந்து நடத்தியது. ஹசனம்மாளுக்கும் அவரது குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதன்பிறகு, மசூதை அடித்து கொலை செய்த காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 2 வருடங்களாக என்.சி.ஹெச்.ஆர்.ஓ. பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் நிர்வாகிகள் தமிழக காவல்துறை உயரதிகாரிகள், உள்துறை செயலர் ஆகியோரை தொடர்ந்து பலமுறை சந்தித்து இதற்காக கடும் முயற்சி எடுத்தனர்.
இறுதியாக, இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மசூதை அடித்துக் கொலை செய்த டி.எஸ்.பி., ஏ.டி. எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் 12 பேர் மீது கடந்த நவம்பர் 10ம் தேதி தென்காசி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் வழக்கறிஞர்கள் குழு இவ்வழக்கை மிகவும் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தது.
ஜூன் 2010
உலகமெங்கும் சர்வதேச சித்தரவதை எதிர்ப்பு தினம் ஜூன்-26 உ அன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தமிழ்நாடு (NCHRO) சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம், நோட்டிஸ் பிரச்சாரம் நடத்தப்பட்டது. திருச்சியில் சித்தரவதை எதிர்ப்பு தின கருத்தரங்கம் சந்தன மஹாலில் 26.06.2010 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் காவல்நிலைய சித்தரவதையில் கொல்லப்பட்ட கடையநல்லூர் மசூதிற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஏப்ரல் 2011
NCHRO வின் நான்கு வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
மசூத் கொல்லப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர் நீதிமன்றத்திலும், தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது NCHRO.
மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி. பா. மோகன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தது NCHRO.
NCHROவின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மசூத்தின் மனைவி ஹசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்குமாறு 2011 பிப்ரவரி மாதம் 11ம் தேதி குமரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட து.
அதன்படி அந்த இழப்பீட்டு தொகையை NCHRO வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி, நெல்லை மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.க. சர்தார் அரபாத் அவர்களின் முன்னிலையில் 07.03.2011 அன்று மாவட்ட கலெக்டர் அந்த தொகையை ஹசனம்மாளிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த NCHRO வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள் கூறுகையில் ‘நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை. காவல் நிலைய சித்திரவதையின் மூலம் மசூத் அவர்களை கொலை செய்த டி. எஸ். பி.க்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நாங்கள் நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்று கூறினார்.
நீதி வென்றது!
நவம்பர் 2011
NCHROவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி காவல்துறை சித்தரவதையில் கணவனை இழந்தவருக்கு 8 இலட்சம் இழப்பீடு
அதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஹசனம்மாள் குடும்பத்திற்கு ரூபாய் 8 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஏற்கனவே 07.03.2011 அன்று வழங்கப்பட்ட உடனடி நிவாரண தொகை போக மீதமுள்ள 7,52,084 (ஏழு இலட்சத்தி ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்பத்தி நான்கு) ரூபாயை கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர் பன்னீர் செல்வம் என்.சி.ஹெச்.ஆர்.ஒ.வின் மக்கள் தொடர்பு அலுவலர் ஏ. செய்யது அப்துல் காதர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரிமாவட்ட தலைவர் ஜுல்பி மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் கடையநல்லூர் நகர தலைவர் லுக்மான் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட ஹசனம்மாளிடம் வழங்கினார்.
பிப்ரவரி 2013
மசூத் காவல் நிலைய மரணம்த் காவல் நிலைய மரணம்: சிறப்பு அரசு வழக்கறிஞராக சி.எம். ஆறுமுகம் நியமனம்
உயர்நீதிமன்ற உத்தரவு திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கை திறம்பட நடத்தி காவல்துறை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக, பாதிக்கப்பட்ட ஹஸனம்மாள் தரப்பில் வாதாடுவதற்காக ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யக்கோரி என்.சி.ஹெச்.ஆர்.ஓ. சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த 2011ம் வருடம் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
பரிந்துரை மேலும், அவ்வாறு நியமிக்கும் போது, ஹஸனம்மாள் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சி.எம். ஆறுமுகம் என்பரையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை செய்தபோது, நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை மாவட்ட எஸ்.பி. மற்றும் சென்னை குற்றவியல் இயக்குநர் ஆகியோரும் ஆறுமுகம் அவர்களை நியமிக்கலாம் என சிபாரிசு செய்தனர்.
அரசாணை இதனைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் சி.எம். ஆறுமுகம் அவர்களை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை (G.O) பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கை நடத்துவதற்கான வழக்கறிஞர் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்வதாகவும், நெல்லை மாவட்ட கலெக்டர் இந்த கட்டணத்தை சி.எம். ஆறுமுகம் அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட வெற்றி ‘கடந்த 8 வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கு நீதிக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியது. இந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமன உத்தரவு முதல் கட்ட வெற்றியாகும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறையை சார்ந்த குற்றவாளிகளுக்கு இந்த உத்தரவு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 2015
இவ்வழக்கில் கியூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரபால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.