ED, NIA போன்ற விசாரணை அமைப்புகளை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் பா.ஜ.க: சிவசேனா குற்றச்சாட்டு.!

0

மகாராஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற நிறுவனங்களை பா.ஜ.க. பயன்படுத்துவதாக சிவசேனா கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான “சாம்னா” வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த பா.ஜ.க. தலைவர்கள் மத்திய புலனாய்வு நிறுவனங்களான அமலாக்கத்துறை (ED) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவை தங்கள் பாக்கெட்களில் உள்ளதாக எண்ணி, தங்கள் அரசியல் எதிரிகளை மிரட்டப் பயன்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதுதான் பா.ஜ.க.வின் ஒரே கொள்கையாக உள்ளது  என்றும், அடிப்படையற்றக் குற்றச்சாட்டுகளின் மூலம் மாநிலத்தில்  பதற்றத்தை உண்டாக்க முயல்கிறது என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

“ஆளுநர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் வரை, எல்லோரும் மகாராஷ்டிரா அரசின் எதிரி போன்று செயல்படுகின்றனர்” என்றும் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் இது போன்ற நடவடிக்கையால் அமலாக்கத்துறை (ED) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA)  மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.