
உச்சநீதிமன்ற தீர்ப்பும், சமச்சீரான உரிமையும்!
பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகமும், எதிர் கருத்துகளும் கைக்கோர்த்து செல்லவேண்டும். ஆனால், எதிர் கருத்துகளை தெரிவிக்கும் போராட்டங்களை நிச்சயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாகில் 2019 டிசம்பர் 14 முதல் 2020 மார்ச் வரை நடந்த பெண்களின் அமைதியான தர்ணா போராட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஷாஹினி, முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நந்த கிஷோர் கார்க் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த…
சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்
உன்னை நான் அறிந்தால்…
சீனா தனது மக்களை மட்டும் கண்காணிக்கவில்லை, எல்லை தாண்டி பல நாடுகளையும் கண்காணிக்கின்றது, தகவல்களை திருடுகின்றது என பல நாடுகள் சீனாவை கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் கண்காணிப்புகள் நமது நாட்டிலும் நடைபெற்றதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே 100க்கும் அதிகமான சீனாவின் மொபைல் செயலிகளை தடை செய்து உத்தரவிட்டது.
செப்டம்பர் 15ந் தேதி செய்தித் தாள்களில் முக்கிய செய்தி ஒன்று வெளியானது. சீனாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தகவல்களை திரட்டித் தரும் சேவைகளை செய்து வருகின்றது, அந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பத்தாயிரத்திற்கும் …
லிபர்ஹான் கமிஷன் குறிப்பிட்ட 68 குற்றவாளிகள்
பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் தலைமையிலான கமிஷன் 17 ஆண்டுகளாக விசாரித்து 2009ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதில் நீதிபதி லிபர்ஹான் சங்பரிவார தலைவர்கள் 68 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளின் விவரம்:
- ஆச்சார்யா தர்மேந்திர தேவ்தர்ம சன்சத்
- ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) துணைத்தலைவர்
- ஏ.கே. சரண் உத்திரபிரதேச மாநில பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.
- அகிலேஷ் மெஹ்ரோத்ரா பைஸாபாத் நகர கூடுதல் எஸ்.பி.
- அஷோக் சிங்கால் வி.ஹெச்.பி. யின் அகில உலக தலைவர்
இந்தியில் 2,300 பக்கத் தீர்ப்பு: மற்றொரு சதி!
28 ஆண்டுகளாக நடந்து வந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் சதி வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 குற்றவாளிகளையும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இது ஒரு அரசியல் தீர்ப்பேயன்றி வேறில்லை என நீதியை நேசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களாலும் இந்தத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
தீர்ப்பு வழங்கப்பட்ட மொழியே மற்றொரு சதி. காரணம், அது இந்தியில் இருந்தது. இந்திய ஒன்றியத்தில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொழி இந்தி அல்ல. பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தத ஒன்றாகும். பள்ளி இடிக்கப்பட்ட நிகழ்வு பாதிக்கப்பட்ட சமூகத்துடன் அவர்களுக்குத் துணையாகவும் ஆதரவாகவும் நிற்கும் சக இந்திய குடிமக்களின் உணர்வுகளுடன், மன வேதனைகளுடனும் பின்னிப் பிணைந்ததாகும். இந்திய ஒன்றியத்தின்…
உ.பி.: தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் கைது!
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவத்தில் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த நான்கு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய உத்தர பிரதேச காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறதோ என்கிற சந்தேகத்தை அவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. மரணம் அடைந்த பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவசரஅவசரமாக நள்ளிரவில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும்எரித்தனர். அக்கிராமத்தை சுற்றி காவல் துறையினரை…
சிறந்த மனித மதிப்பீடுகளில் (க்ஷிணீறீuமீs) பிரதானமானது சுயமரியாதை. ‘மனிதன்’ என்ற தகுதியை சுயமரியாதை அற்றவன் இழந்துவிடுகிறான்.
சுயமரியாதையின் முக்கியத்துவத்தை இயக்கமாகக் கொண்டு சென்ற பெரியார், ‘‘மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதை’’ என்றார். மேலும் “மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான — அவமானம் என்னும்…
- பொறாமை சூழ் உலகு
பரபரப்பாக இருந்தோம். டெட்ராய்ட் நகரில் உள்ள ஒலிம்பியா அரங்கில் தலைவர் எலிஜா முஹம்மது பேசும் பொதுக் கூட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். டெட்ராய்ட் நகர பள்ளிவாசலை ஒட்டியிருந்த முஸ்லிம் உணவகத்தில் அமர்ந்து இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.
“ப்ரதர் எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தலைவரும் சிகாகோவில் இருந்து கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல…
ஜாலியன் வாலாபாக்
ஏப்ரல் 13
ஏழு வயதில் ஐந்து சிஷ்யர் (சீக்கியர்) சேர்ந்து அவர்களது ஆதிகிரந்தத்திலிருந்து மந்திரங்களைச் சொல்லி, தண்ணீரில் இனிப்புகளை கத்தி கொண்டு கலந்து இனிப்பு நீரை புதிதாகச் சேர்பவர்கள் ஒரே கோப்பையிலிருந்து குடிப்பார்கள். கல்சாவின் ஆண் உறுப்பினர்களுக்கு ‘சிங்’ பெண்களுக்கு ‘கவுர்’ எனும் பட்டப்பெயர் வழங்கப்படும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்…
இறை நெருக்கம்
“எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை
Discussion1 Comment
No