பிஞ்சுகளின் மனதில் நஞ்சுகளை விதைக்கும் இந்து அமைப்புகள்: கவலையில் பள்ளி கல்வித்துறை

0

பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 மாணவர்களை கொண்ட குழு இருப்பதாக, பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தின் தலைவர்களின் வரலாற்றை கூறியும், இந்து மதத்தின் கொள்கைகளை பரப்பி, இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் வெளிவந்துள்ளது.

இதுகுறித்தும் உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு செய்து அரசுக்கு தெரிவிக்கும்படி அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இது குறித்து பேச இருப்பதாகவும், பள்ளி, கல்லூரிகளில் எந்த ஒரு விரும்பத்தகாத செயல்கள் அறங்கேறிநாலும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.