முகமது நபியின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்- காங்கிரஸ் தலைவர்

0

முகமது நபிகளின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுபாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

முகமது நபியின் பிறந்தநாளான நேற்று, டெல்லி முஸ்தபாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய சுபாஷ் சோப்ரா, “முகமது நபி, அவரது வாழ்க்கை காலத்தில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்டினார்.  கல்வியை வளர்ப்பதில் அவர் முன்னின்று உழைத்தார். உலகமெங்கும் பயணித்து அறிவை பெருக்குமாறு அரேபிய மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

முகமது நபி மனித குலத்திற்கு மகத்தான முன்னுதாரனமாக விளங்கினார். அவரது போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

Comments are closed.