பாஜகவின் நில அபகாரிப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: போராட்டத்தில் இறங்கிய கஷ்மீர் மக்கள்

0

ஜம்மு கஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கிக்கொள்ளலாம் என்ற என்று பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35-ஏ ஆகியவை அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு கஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பாஜக அரசு பிரித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் பாஜக அரசு தற்போது ஜம்மு கஷ்மீரில் முதலீட்டாளர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கிக்கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூல  காஷ்மீர் மக்களின் நிலங்கள் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த சட்டத்திற்கு ஜம்மு கஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்களின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் கள்ளத்திட்டம் என மெஹ்பூபா முப்தி கூறினார். இந்த சட்டத்திற்கு உமர் அப்துல்லாஹ் உட்பட பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில், யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று அங்குள்ள கட்சிகள் அழைப்பு விடுத்த நிலையில், தெருவில் இறங்கி பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.