காஷ்மிர் விவகாரம்: இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்!

0

பாஜக அரசு ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரு மாதம் கடந்தும் இன்னும் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தற்போது காஷ்மிர் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜெனிவாவில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடக்கிறது. காஷ்மிர் பிரச்சனை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்திருந்தார்.

காஷ்மிரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு ஐ.நா மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் மிச்சேல் பேச்லெட், “காஷ்மீரில் இந்திய அரசு சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இணையதள சேவை, உள்ளிட்ட தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் கைது செய்து நீண்ட நாள் வீட்டுகாவலில் வைத்திருக்கும் நடவடிக்கைகள் சரியானவை அல்ல.

அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும். அங்குள்ள மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும், காஷ்மிர் மக்களிடம் ஆலோசித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்” என்று மிச்சேல் பேச்லெட் தெரிவித்தார்.

Comments are closed.