புதிய நாடாளுமன்ற திறப்பு விழா… ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை !

புதிய நாடாளுமன்றத்தின் உட்புறத்தோற்றம்

டில்லியில் உள்ள லுட்யன்ஸ் நகரின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் அமரலாம்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28ம் தேதி திறந்து வைக்குமாறு லோக்சபா சபாநாயகர் ஒம் பிர்லா பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதியான முர்முவை அழைக்காததற்கு அனைத்து எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply