CAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு முதன்முதலில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி அம்மாநில அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

கேரள அரசை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபைகளிலுல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானா சட்டசபையிலளிலும் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

முன்னதாக மேற்கு வங்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், 4வது மாநிலமாக மேற்குவங்கம் நேற்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி ‘‘குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என எதையும் மேற்குவங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாட்டை விட்டு திட்டமிட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

ஆதாரங்களை கேட்டு துன்புறுத்தல்கள் நடப்பதை அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்தார்.

One thought on “CAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

  1. வாழ்த்துக்கள் தீதி , நெஞ்சுரம் உள்ள , தம் மக்களை நேசிக்கக்கூடிய அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் .

Comments are closed.