பசுக்களை வெட்டினால் சிறையில் அடைக்கப்படுவார்கள் -யோகி திட்டவட்டம்

0

மாடுகள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உ.பி.யில் நவம்பர் 3ம் தேதி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட செய்த யோகி ஆதித்யநாத், “மாடுகள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அதனை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் உள்ளது” என்றார்.

முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசுவதை தடுப்புச் சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயப்படுத்தப்படுவதாக அலகாபாத் நீதிமன்றம் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.