பாஜக பக்கம் சாயும் மாயாவதி…!

0

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.க-வுக்கு கூட வாக்களிப்போம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், மீண்டும் இக்கூட்டணி வெற்றி பெறவில்லை. இதனால் கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ-க்கள், சமாஜ்வாதி தலைவர் அகிலேசை சந்தித்து பேசினர். அவர்கள் விரைவில் சமாஜ்வாதியில் சேரப்போவதாக தெரிவித்ததுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது எனவும் கூறியுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இது குறித்து மாயாவதி கூறியதாவது: “உத்தர பிரதேச தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க நாங்கள் பா.ஜ.க-வுக்கு கூட வாக்களிப்போம் அல்லது வேறு கட்சிக்காவது  வாக்களிப்போம். ராஜ்யசபா தேர்தல் எதிர்காலத்தில் உ.பி.,யில் நடக்கும் மேலவை தேர்தலில் சமாஜ்வாதியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம்.

சமாஜ்வாதியின் வேட்பாளரை தோற்டிக்கும் வகையில், எந்த கட்சி வேட்பாளர் செயல்பட்டாலும், அவர்களை பகுஜன் சமாஜ் ஆதரிக்கும். கடந்த 1995ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதுநான் செய்த மிகப்பெரிய தவறு. கடந்த லோக்சபா தேர்தலில் அகிலேசுடுன் நாங்கள் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம்” இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

Comments are closed.