மேற்கு வங்கத்தில் பாஜக கட்சிக்குள் மோதல்: அலுவலகம் சூறை

மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிடும் வேட்பாளர் பட்டி­யலை பாஜக தலைமை வெளி­யிட்ட நிலை­யில் பாஜக தொண்­டர்­களும் நிர்­வாகி­களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

வேட்­பா­ளர் தேர்வு மிக மோச­மாக உள்­ளது என கருத்து தெரிவித்துள்ள பாஜகவினர் திங்­கட்­கி­ழமை கொல்­கத்­தா­வில் உள்ள பாஜக தேர்­தல் அலு­வ­ல­கத்­துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜ­க­ கடையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்­கா­மல் ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து அண்­மை­யில் பாஜகவில் இணைந்த பலரை தேர்­த­லில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பாஜக தொண்­டர்­க­ள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திங்­கட்­கி­ழமை கொ­கத்­தா­வில் நடந்த போராட்­டத்­தின்­போது பாஜ­க­வின் மூத்த தலை­வர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் கண்­டன முழக்கங்களை அக்கட்சியினர் எழுப்பினர்.

பாஜக தேர்­தல் அலு­வ­ல­கத்­துக்கு வெளியே திரண்­டி­ருந்த­ பாஜகாவினர், போலி­சார் அமைத்­தி­ருந்த தடுப்­ப­ரண்­களை மீறி அலு­அலுவலகத்திற்குள் நுழைய முற்­பட்­ட­னர்.

கொல்கத்­தா­வைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பாஜக அலு­வ­ல­கமும் அக்­கட்­சி­யி­ன­ரால் சூறை­யா­டப்­பட்­ட­துள்ளது.