மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்ட நிலையில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் தேர்வு மிக மோசமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ள பாஜகவினர் திங்கட்கிழமை கொல்கத்தாவில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக கடையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த பலரை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை கொகத்தாவில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை அக்கட்சியினர் எழுப்பினர்.
பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த பாஜகாவினர், போலிசார் அமைத்திருந்த தடுப்பரண்களை மீறி அலுஅலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
கொல்கத்தாவைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகமும் அக்கட்சியினரால் சூறையாடப்பட்டதுள்ளது.
You must be logged in to post a comment.